search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் கைது"

    மேட்டூர் அருகே லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டூர்:

    மேட்டூரை அடுத்த காவேரி கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் செல்ல வேலு (வயது34). லாரி டிரைவரான இவர் கடந்த 17-ந்தேதி கிழக்கு, மேற்கரை கால்வாய் கரை பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். மர்ம நபர்கள் செல்லவேலுவை கொலை செய்து கால்வாய் கரை பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்ல வேலு உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார்.

    கொலை நடந்து 3 நாட்களாக கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் துப்பு துலங்காமல் இருந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொலையாளிகளை தேடினர். அப்போது இந்த கொலையில் செல்லவேலுவிடம் கிளீனராக இருந்த 17 வயது சிறுவன் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    செல்லவேலுவுக்கு அந்த பகுதியை சேர்ந்த 40 வயது பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அடிக்கடி அந்த பெண்ணை தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இது அந்த சிறுவனுக்கு தெரியவந்தது. செல்லவேலுவுக்கு தெரியாமல் சிறுவன் அந்த பெண்ணிடம் பழக ஆரம்பித்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணும் சிறுவனும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இந்த வேளையில் அங்கு வந்த செல்லவேலு அவர்களை கையும் களவுமாக மடக்கி பிடித்தார். சிறுவனை கண்டித்த செல்லவேலு இதுபற்றி அவனது பெற்றோரிடம் சொல்லிவிடுவதாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்லவேலுவை கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் சிறுவனை கைது செய்தனர். அவனிடம் இருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இறச்சகுளம் அருகே பிறந்தநாள் விழாவின் போது 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் மீது போஸ்கோ சட்டப்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    நாகர்கோவில்:

    குலசேகரம் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் கணவரை பிரிந்து 4 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

    அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இவர்களின் குழந்தைக்கு சமீபத்தில் பிறந்த நாள் வந்தது.

    இதற்காக குழந்தையை பெண்ணின் கணவர் இறச்சகுளம் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

    இறச்சகுளம் பகுதியில் உள்ள கணவரின் உறவினர் வீட்டில் சிறுமியின் பிறந்த நாள் விழா நடந்தது. விழா முடிந்த பின்பு சிறுமியை அவரது தாயாரிடம் கணவர் ஒப்படைத்தார்.

    அப்போது சிறுமி, தாயாரிடம், கணவரின் உறவினர் வீட்டில் தனக்கு பாலியல் தொல்லை நடந்ததாக கூறி அழுதார்.

    அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இது பற்றி பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதில் பிறந்த நாள் விழாவுக்குச் சென்ற இடத்தில் கணவரின் உறவுக்கார சிறுவன், தனது 4 வயது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்தார்.

    13 வயதே ஆன அந்த சிறுவன் மீது பூதப்பாண்டி போலீசார் போஸ்கோ சட்டப்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    வழிப்பறியில் ஈடுபட்ட பொன்னேரியை சேர்ந்த சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைத்தனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் தடப்பெரும்பாக்கம் கூட்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாலிபர் ஒருவர் ஓட்டம் பிடித்தார்.

    அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது பொன்னேரி அடுத்த லெட்சுமிபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்பதும் சாலையில் தனியாக வருபவர்களிடம் கத்தியைக் காட்டிமிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டி இருந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைத்தனர். #tamilnews
    சாத்தான்குளத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். கட்டிட தொழிலாளியை தேடி வருகிறார்கள்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துச்செல்வன் (வயது 42). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. கடந்த 2-ந் தேதி முத்துச்செல்வன் தனது மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு தோட்டத்திற்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    இது குறித்து தட்டார்மடம் போலீசில் அவர் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தட்டார்மடம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற ஒரு சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் உடன்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் புத்தன்தருவையை சேர்ந்த கட்டிட தொழிலாளி செந்தில்வேல் என்பவருடன் சேர்ந்து விவசாயி முத்துச்செல்வன் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. 

    இதையடுத்து அந்த சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் செந்தில்வேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    சங்கரன்கோவில் அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள மலையாங்குளத்தை சேர்ந்தவர் சண்முகையா மகன் கோகுல் (வயது 20). இவர் சாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். 

    சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் சேர்ந்து மலையாங்குளம் மில் எதிரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தாராம். அங்கு அதே ஊரை சேர்ந்த குருசாமி மகன் மதுசூதனன் (16) தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அப்போது மதுசூதனன் கோகுலின் நண்பரிடம் வெளியூர்காரன் இங்கு வந்து எப்படி சாப்பிடலாம் என கேட்டுள்ளார். இதை கோகுல் தட்டி கேட்டுள்ளார். 

    இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த மதுசூதனன், அவரது நண்பர்கள் கருத்தானூரை சேர்ந்த இளங்கோ, இலந்தை குளத்தை சேர்ந்த சாமுவேல், மலையாங்குளத்தை சேர்ந்த மன்மதன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து கோகுலை அடித்து தாக்கி உதைத்துள்ளனர். 

     இதில் காயமடைந்த கோகுல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குருவிகுளம் போலீசார் மதுசூதனனை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.  
    அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனை போலீசார் கைது செய்தனர். #Indiankilled

    நியூஜெர்சி:

    தெலுங்கானா மாநிலம் மேடக் பகுதியை சேர்ந்தவர் சுனில் எட்லா (61). இவர் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் வென்ட்னார் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

    அட்லாண்டிக் சிட்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்தார். கடந்த 15-ந்தேதி இரவு இவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியேவந்தார்.

    அப்போது 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அங்கு காரில் வந்தான். அதில் இருந்து இறங்கிய அவன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுனில் எட்லாவை சரமாரியாக சுட்டான்.

    இதனால் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அந்த சிறுவன் காரில் ஏறி தப்பி ஓடிவிட்டான்.


    தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி துப்பாக்கியால் சுட்ட சிறுவனை கைது செய்தனர்.

    அவன் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கொள்ளை மற்றும் சட்டத்துக்கு விரோதமாக கைத் துப்பாக்கி வைத்திருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு போடப்பட்டுள்ளது.

    சுனில்எட்லா கடந்த 1987-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியா வந்து தனது குடும்பத்தினரை சந்தித்தார். டிசம்பர் மாதத்தில் தனது தாயாரின் 98-வது பிறந்த நாள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட 2 மாத விடுமுறையில் இந்தியா வர இருந்தார்.

    தாயாரின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்குள் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுடப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படவில்லை. இவர் அட்லாண்டிக் சிட்டியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பியானோ வாசித்து வந்தார். இதனால் இவர் பிரபலமானவராக திகழ்ந்தார். #Indiankilled

    திண்டுக்கல் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரையை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 17). பிளஸ்-2 முடித்து உள்ளார். இவரும் சிங்காரகோட்டையை சேர்ந்த குமரேசன் மகன் விஜி (18) என்பவரும் காதலித்து வந்தனர்.

    கடந்த மாதம் 2 பேரும் திடீர் என மாயமானார்கள். தனது மகளை விஜி கடத்தி சென்று விட்டதாக ஐஸ்வர்யாவின் பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர்.

    தனது மகன் காணாமல் போனதால் குமரேசன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் 2 நாட்களாக வந்து செல்கிறார். பின்னர் விரக்தியில் தற்கொலை செய்தார். இதனிடையே பெரம்பலூரில் பதுக்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் வடமதுரை போலீசார் அங்கு சென்று 2 பேரையும் மீட்டு வந்தனர். பள்ளி மாணவியை கடத்திய குற்றத்துக்காக விஜியை போலீசார் கைது செய்தனர். மாணவியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    கே.ஜி. சாவடி அருகே தொழிலாளி வீட்டில் திருடிய 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    கோவை:

    கோவை கே.ஜி. சாவடி அருகே உள்ள மஸ்திகவுண்டன் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 38). கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் மாலையில் வீட்டுக்கு திரும்பினார்.அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.

    அதிர்ச்சியடைந்த ரவிக்குமார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர் அதில் இருந்த 3ž பவுன் தங்க நகைகள், ரூ. 15 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிவிட்டு வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து ரவிக்குமார் கே.ஜி. சாவடி போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்நபரை தேடிவந்தனர். நேற்று அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 15 வயது சிறுவனை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் சிறுவன் அரசம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருவதும் தான் தான் ரவிக்குமார் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடி மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றதையும் ஒப்புக்கொண்டான்.

    இதனையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

    அமெரிக்காவில் வீட்டில் மர்மமாக இறந்த கிடந்த 83 வயது மூதாட்டியை பிரேத பரிசோதனை செய்ததில் கற்பழிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் உள்ள பால்டி மோர் நகரை சேர்ந்த பெண் டோரோதிமயே நீல். 83 வயதான இவர் தனது வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனை நடத்தினர். அப்போது அவர் கற்பழிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. அதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    இது தொடர்பாக 14 வயது சிறுவன் திரோன் ஹார்வின் என்பவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அவன் மீது கற்பழிப்பு மற்றும் கொலை குற்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    திருமழிசை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் 1½ கிலோ கஞ்சா கடத்திய சிறுவனை கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    திருமழிசை அருகே வெள்ளவேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற சிறுவனை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 1½ கிலோ கஞ்சா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தியதில் அவனது பெயர் யுவராஜ் (வயது 16). திருமழிசையை அடுத்த பிராயம்பேட்டையை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதையடுத்து யுவராஜை கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
    பாட்னாவில் இலவசமாக காய்கறி கொடுக்க மறுத்த சிறுவனை சிறையில் அடைத்தது தொடர்பாக 11 போலீஸ்காரர்களை சஸ்பெண்டு செய்து ஐ.ஜி. உத்தரவிட்டார். #patnapolice
    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னாவில் சாலையோரம் வியாபாரம் செய்பவர்களிடம் போலீசார் கட்டாய மாமூல் வசூலில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சிறுவன் இப்போது தான் வந்தேன் வியாபாரம் ஆகவில்லை என்றான்.அப்படியானால் காய்கறியாக கொடு என்று கேட்டனர். அதற்கு சிறுவன் மறுத்து விட்டான். இதையடுத்து சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    போலீசாரின் இந்த செயல் குறித்து சிறுவனின் தந்தை முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு கடிதம் எழுதினார். அவர் உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து பாட்னா ஐ.ஜி. நய்யார் உசைன்கான் இதுபற்றி விசாரிக்க 3 பேர் குழுவை நியமித்தார். அவர்கள் விசாரணை நடத்தி ஐ.ஜி.யிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இதில் சிறுவனுக்கு எதிராக போலீசார் விதியை மீறி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிறையில் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட 2 போலீஸ் நிலைய அதிகாரிகள் உள்பட 11 போலீஸ்காரர்களை சஸ்பெண்டு செய்து ஐ.ஜி. உத்தரவிட்டார். மேலும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சிறுவனை விடுதலை செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டது. #patnapolice
    ×